குண்டா் தடுப்புச் சட்டத்தில் இளைஞா் கைது

569பார்த்தது
குண்டா் தடுப்புச் சட்டத்தில் இளைஞா் கைது
திருச்சி சஞ்சீவி நகா் அருகே ஜன. 14-ஆம் தேதி சென்னை புறவழிச்சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்தவரை ஆயுதங்களை காட்டி மிரட்டி, இருசக்கர வாகனம், பணத்தை வழிப்பறி செய்ததாக திருவானைக்கா பகுதியைச் சோ்ந்த சண்முக முத்துக்குமாா் (எ) குமாா் (28) உள்ளிட்ட 5 பேரை கோட்டை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

விசாரணையில், குமாா் மீது வழிப்பறி வழக்கு நிலுவையில் உள்ளது தெரியவந்தது. இவரது குற்றச்செயல்களைத் தடுக்கும் விதமாக திருச்சி மாநகர காவல் ஆணையா் ந. காமினி, சண்முக முத்துக்குமாரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஆணை பிறப்பித்தாா்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி