திருச்சி மாநகராட்சி, மரக்கடை பகுதிகளில் நாளை 21.02.2024 (புதன்கிழமை) குடிநீர் விநியோகம் இருக்காது.
திருச்சி கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையத்தில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனையொட்டி கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையத்திலிருந்து குடிநீர் விநியோகம் பெறும் மாநகராட்சி பகுதிகளான மரக்கடை, விறகுபேட்டை ஆகிய பகுதிகளில் நாளை புதன்கிழமை, குடிநீர் விநியோகம் இருக்காது என இந்த தகவலை திருச்சி மாநகராட்சி ஆணையர் வே. சரவணன் தெரிவித்துள்ளார்.