ஒன்றிய அரசு நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை புறக்கணித்த தை கண்டித்தும், ஏழை, நடுத்தர மக்கள் மீது தாக்குதல் நடத்தும் ஒன்றிய அரசை கண்டித்தும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சலுகை மழை பொழியும் நாச கர ஒன்றிய பட்ஜெட்டை கண்டித்து இடதுசாரி கட்சிகள் சார்பில் மறியல் போராட்டம் நடத்துவது குறித்து திருச்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் CPM மாநகர் மாவட்ட செயலாளர் R. ராஜா, CPI மாநகர் மாவட்ட செயலாளர் எஸ். சிவா, AITUC மாவட்ட பொதுச் செயலாளர் க. சுரேஷ் M. C, மாவட்டத் துணைச் செயலாளர் C. செல்வகுமார், மணிகண்டம் ஒன்றிய செயலாளர் M. R. முருகன், பகுதி குழு செயலாளர் இரா. சுரேஷ் முத்துச்சாமி, P. ராஜா, விவசாய சங்க மாநில நிர்வாக குழு உறுப்பினர் அயிலை சிவ. சூரியன் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டார்கள். கூட்டத்தில்வருகிற வியாழக்கிழமை காலை 10. 00 மணிக்கு திருச்சி தெப்பக்குளம் தபால் நிலையம் அருகிலிருந்து பேரணி துவங்கி காமராஜர் வளைவு அருகில் இருக்கும் BSNL அலுவலகத்தை முற்றுகை யிட்டு மறியல் நடத்துவதென முடிவெடுக்கப்பட்டது. இதில் CPI, CPI(M), CPI(ML)தோழர்கள் பெருமளவில் கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது