சர்வதேச மனநல விழிப்புணர்வு பேரணி

255பார்த்தது
சர்வதேச மனநல விழிப்புணர்வு பேரணி
திருச்சி மாவட்ட மனநல திட்ட இணை இயக்குனரகம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் ஸ்ரீ மனநல பராமரிப்பு மையத்தின் சார்பில் சர்வதேச மனநல தினத்தை முன்னிட்டு மனநல விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய இப்பேரணியை ஆட்சித்தலைவர் பிரதீப்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மனநல விழிப்புணர்வு மற்றும் மனநலம் சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பது குறித்த உறுதிமொழியை 50 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ , மாணவிகள் ஏற்றுக் கொண்டனர்.

தொடர்ந்து கைகளில் மனநல விழிப்புணர்வு பதாகைகள் மற்றும் நீல நிற பலூன்களை ஏந்திய படி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய இப்பேரணி மேஜர் சரவணன் நினைவுத்தூண் பகுதியில் முடிவடைந்தது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி