திருச்சி மத்திய சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் எம். ஆர் விஜயபாஸ்கரை முன்னாள் அமைச்சர்கள் சி. வி. சண்முகம், தங்கமணி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் சந்தித்து பேசினர்.
அதன் பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் திருச்சி மத்திய சிறை வாசலில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பொழுது.
தமிழ்நாட்டில் தினந்தோறும் கொலை கொள்ளை கற்பழிப்பு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருக்கிறது. கள்ளச்சாராயம் ஆறாக ஓடிக்கொண்டிருக்கிறது.
அதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதற்கு துணியாமல் காவல்துறை கையில் வைத்திருக்கிற முதலமைச்சர் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழக அரசு எதிர்க்கட்சிகளை காவல்துறை வைத்து போய் வழக்குகளை போட்டு அடக்கி விடலாம் முடக்கி விடலாம் என நினைக்கிறார்கள். அது நடக்காது.
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது பொய்யாக வழக்கு போடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நீதிமன்றத்தில் அதை உடைத்து நிரபராதி என்று நிரூபித்து விரைவில் வெளியே வருவார். காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கு கண்டுபிடிக்கப்படாமல் உள்ளதற்கு கூட்டணி கட்சித் தலைவரை போய் கேளுங்கள் என பதிலளித்துவிட்டு சென்றார்.
கரூரில் 100 கோடி ரூபாய் நில மோசடி விவகாரத்தில் கைதாகி திருச்சி மத்திய சிறையில் இருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகம், தங்கமணி உள்ளிட்ட அதிமுகவினர் சென்று பார்த்து வருகின்றனர்.