காவேரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

70பார்த்தது
காவேரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையின் காரணமாக கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணை மற்றும் கபினி அணைகளிலிருந்து 1. 45 இலட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு சேலம் மேட்டூர் அணையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சேலம் மாவட்டம், மேட்டூர் அணை நாளை (28. 07. 2024) முழு கொள்ளளவை எட்டும் என தகவல் வெளியாகியுள்ளது.

எனவே காவிரி கரையோர கிராமங்களில் உள்ள மக்கள் மற்றும் சலவைத்தொழிலாளர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும், நீர்வரத்து விவரத்தினை தெரிந்துகொள்ளுமாறும் தேவைப்பட்டால் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

ஆற்றில் குளிக்கவோ, நீந்தவோ, மீன்பிடிக்கவோ அல்லது பொழுது போக்கவோ பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. பாதுகாப்பற்ற கரையோரங்கள் மற்றும் ஆபத்தான பகுதிகளில் நின்று கொண்டு பொதுமக்களோ அல்லது மாணவர்களோ "செல்பி" (Selfie) எடுக்க அனுமதி இல்லை.

குறிப்பாக குழந்தைகள் பார்த்துக்கொள்ளவேண்டும். நீர்நிலைகளில் கால்நடைகளை இறங்கா வண்ணம் குளிப்பாட்டுவதற்கு நீர்நிலைகளுக்கு கொண்டு செல்ல வேண்டாம் எனவும், பாலங்கள் தவிர, பாதுகாப்பற்ற இடங்களில் ஆற்றை கடக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் செய்தி குறிப்பில் தெரிவித்து உள்ளார்.

தொடர்புடைய செய்தி