இயக்குனர் அமீர் செய்தியாளர் சந்திப்பு

66பார்த்தது
திருச்சி சுப்பிரமணிபுரம் பகுதியில் தனியார் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட திரைபட இயக்குனர் அமீர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது கூறுகையில்.
தமிழ் சினிமாவில் கிராமத்து கதைகள் பற்றிய படம் அதிக அளவில் வருகிறது என்ற கேள்வி??
கிராமங்கள் என்பது இந்தியாவின் முதுகெலும்பு ஆகும். ஆகையால் திரைத்துறையில் கிராமத்தை தவிர்த்து விட்டு எந்த படமும் எடுக்க இயலாது.

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர்சாதிக்கு, ஜாமீன் வழங்கப்பட்டது குறித்த கேள்வி??

இந்த வழக்கை பற்றி எனக்கு முழுமையாக தெரியாது. நீதிமன்றத்தில் நீதியரசர் விசாரணையில் எந்த முகாந்திரமும் இல்லாமல் இருப்பதாக தெரியவந்தது. ஆகையால் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதாக தெரிகிறது. மற்றபடி எனக்கு இந்த வழக்கை பற்றி எதுவும் தெரியாது.

நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா??

அரசியலில் அனைவரும் இருக்க வேண்டும். தற்போது இருக்கும் நெருக்கடி சூழ்நிலையில் அரசியலுக்கு வந்தாலும் வரலாம். அதுதான் எனக்கு உள் உணர்வு சொல்கிறது.

அரசியலுக்கு வந்தால் திராவிட கட்சியில் சேருவீர்களா??

திராவிடம் என்ற சொல்லின் அர்த்தத்தை புரிந்தால் மட்டுமே திராவிடம் வேண்டும், வேண்டாம் என்று தெரியவரும்.

ஆரியத்திற்கு எதிரான சொல் தான் திராவிடம் ஆகும் என பேசினார்

தொடர்புடைய செய்தி