போண்டா, வடை, பஜ்ஜி, ஜிலேபி போன்ற எண்ணெய் பலகாரங்களில் உள்ள எண்ணெயை வெளியேற்ற செய்தித்தாள்களை பயன்படுத்துகிறார்கள். இது உடலுக்கு பல்வேறு பாதிப்பை ஏற்படுத்தும். செய்தித்தாளின் அச்சு மையில் காரீயம் உள்ளது. இது நேரடியாக உணவுக் குழாய்க்குள் சென்று விடும். காரீயம் உடலுக்குள் சென்றால் சிறுநீரகம், கல்லீரல், எலும்பு வளர்ச்சி, தசை வளர்ச்சி என்று எல்லாவற்றையும் பாதிக்கும், மேலும் புற்றுநோய் அபாயம் அதிகரிக்கும்.