மதுரை மாவட்டம் மேலூர் பகுதியை சேர்ந்தவர்கள் திருமலைசெல்வன் – சுகன்யா தம்பதியினர். இவர்களுக்கு 7 வயதில் ஒமிஷா என்ற மகளும், 4 வயதில் நிகில் என்ற மகனும் உள்ளனர். கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 8ஆம் தேதி ஏற்பட்ட தகராறின்போது, திருமலைச்செல்வன் தான் மறைந்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து குழந்தைகள் மீது ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் 70% தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்றுவந்த நிகில் சிகிச்சை பலனின்றி இன்று (டிச.11) உயிரிழந்துள்ளார்.