தேனி: மறவபட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. இன்று (டிச. 11) காலை மாணவர்கள் வகுப்பில் அமர்ந்திருந்த போது கட்டிடத்தின் மேற்கூரை கான்கிரீட் பூச்சுக்கள் பெயர்ந்து கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து வகுப்பறையில் இருந்த மாணவ, மாணவிகள் உடனடியாக வெளியே சென்றுவிட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதன்பின்னர் அவர்கள் மரத்தடியில் அமர வைக்கப்பட்டனர்.