சமூகவலைதளங்களில் பொய்யான தகவலை பரப்பிய புகாரில் அதிமுக நிர்வாகி சி.டி.ஆர் நிர்மல் குமார் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பாக வியட்நாம் நாட்டில் நடந்த சம்பவத்தை, மெரினாவில் மின்கசிவு ஏற்பட்டது என பதிவிட்டு நிர்மல் குமார் வதந்தி பரப்பியிருந்த நிலையில் வழக்கு பாய்ந்துள்ளது. தற்போது அந்த பதிவை அவர் நீக்கியுள்ளார்.