உலகில் சுறாக்கள் மற்றும் திருக்கை மீன்களின் எண்ணிக்கையானது 1970-ம் ஆண்டை ஒப்பிடும்போது 50%-க்கும் கீழாக குறைந்துள்ளது. அளவுக்கு அதிகமாக மீன் பிடித்தல் காரணமாக இவை பாதிக்கும் மேலாக அழிந்துள்ளன. இறைச்சி, கல்லீரல் எண்ணெய், குருத்தெலும்பு போன்ற உடலின் பிற பாகங்களுக்காக சுறாக்கள் வேட்டையாடப்படுகின்றன. மேலும் வாழ்விடங்களை இழத்தல், பருவநிலை மாற்றம், மாசுபாடு ஆகியவற்றின் விளைவாக இந்த இனங்கள் பெரும் அச்சுறுத்தல்களை சந்திக்கின்றன.