மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியை நீக்க நார்ச்சத்து, வைட்டமின் சி நிறைந்த பழங்கள் உதவுகின்றன. பெர்ரி, வாழைப்பழம், தர்பூசணி, பப்பாளி, ஆப்பிள், அத்திப்பழம், ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களும், பிரக்கோலி, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, காலிஃப்ளவர் போன்ற காய்கறிகளும், சால்மன் மீன், சூரை மீன், மத்தி மீன், கானாங்கெளுத்தி போன்ற ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளும் உதவுகின்றன. நட்ஸ், முழு தானியங்கள் போன்றவற்றையும் எடுத்துக்கொள்வது அவசியம்.