பள்ளி மாணவர்களிடையே மோதல்: ஆசிரியருக்கு கத்திக்குத்து

78பார்த்தது
திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் வரலாறு மற்றும் பயாலஜி படிக்கும் மாணவர்களிடையே இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு போட்டது தொடர்பாக மோதல் இருந்தது. இந்த மோதல் இன்று பள்ளியில் வெடித்தது. இருதரப்பு மாணவர்களும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதில் ஒரு மாணவனின் கைவிரல் துண்டானது. இதைப்பார்த்த வரலாற்று ஆசிரியர் சிவக்குமார் வந்து மோதலை விலக்கி விட்டுள்ளார். அப்போது மாணவர்கள் அரிவாளால் வெட்டியதில் ஆசிரியருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. காயமடைந்த ஆசிரியரையும், மாணவனையும் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஸ்ரீரங்கம் போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு பள்ளியில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி