ஓடாத ரயிலுக்கு முன்பதிவு-ஆன்லைன் மோசடி நடப்பதாக புகார்

79பார்த்தது
திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை சேர்ந்தவர் உமா ராமசாமி ( 75). இவர் வரும் ஜூலை ஐந்தாம் தேதி திருச்சியில் இருந்து பெங்களூர் செல்வதற்கு ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய நேற்று அருகில் உள்ள ஆன்லைன் சென்டருக்கு சென்றுள்ளார்.
அப்போது அவரது பயணத்திற்காக ரயிலில் 3 வகுப்பு ஏசி பெட்டியில் உமாராமசாமி டிக்கெட் முன்பதிவு செய்தார்.
அவருக்கு முன்பதிவு டிக்கெட் உறுதி செய்யப்பட்டு B9 பெட்டியில், 9ம் நம்பர் லோயர் பெர்த் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்காக ரூ875 அவர் செலுத்தினார். பின்னர் அவருக்கு டிக்கெட் உறுதி செய்யப்பட்ட விவரம் குறுந்தகவலாக அனுப்பப்பட்டது.
இதனை தொடர்ந்து அடுத்து 15 நிமிடத்தில் அவரது டிக்கெட் கேன்சல் செய்யப்பட்டதாகவும் பிடித்தும் போக மீதி 650 ரூபாய் உங்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும் எனவும் குறுந்தகவல் வந்தது. இதில் அதிர்ச்சி அடைந்த உமா ராமசாமி ரயில்வே விசாரணை எண் 139க்கு தொடர்பு கொண்டு பேசினார். வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி உமா ராமசாமியிடம் பேசியபோது, அவர் புக்கிங் செய்த தேதியில் அந்த ரயில் இல்லை என கூறினார்.
பின்னர் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரிகள் குறிப்பிட்ட ரயில் இல்லை என கூறுவது ஏற்புடையதாக இல்லை. மேலும் டிக்கெட் முன்பதிவு தானாக ரத்து செய்யப்பட்டதால் தமக்கு 200 ரூபாய் இழப்பீடு ஏற்பட்டதுடன்
மிகுந்த மன உளைச்சல் அடைந்ததாக மூதாட்டி உமா ராமசாமி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி