திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் வட்டாரம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் புதிய சன்ன ரக நெல் உற்பத்தி குறித்து பயிற்சி இன்று(செப்.25) நடைபெற்றது. பயிற்சிக்கு வேளாண்மை உதவி இயக்குனர் கு. செல்வகுமாரி அவர்கள் தலைமை வகித்து, முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் மண் மாதிரி ஆய்வு செய்தல், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பண்ணைக்காடுகள் பசுமை போர்வை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வேம்பு கன்றுகள் மற்றும் வளர்ப்பு மானியம் பற்றி கூறினார்.
வேளாண்மை அலுவலர் திரு. நல்லேந்திரன் அவர்கள் மானியத்தில் வழங்கப்படும் உயிர் உரங்கள், நுண்ணூட்டச் சத்துக்கள், ஜிப்சம் , உளுந்து , மக்காச்சோளம், நிலக்கடலை சாகுபடி தொழில் நுட்பங்கள் பற்றி பேசினார்.
விதைச் சான்று அலுவலர் திரு. ரமேஷ் அவர்கள் பயிற்சியில் கலந்து கொண்டு பேசுகையில் புதிய சன்ன ரக நெல் இரகங்களான அதிக மகசூல் தரக்கூடிய கோ-55, கிண்ணிகுளம் -1மற்றும் நறுமண நெல் வகையான கோ-58 ஆகிய ரகங்களின் சிறப்பு அதன் சாகுபடி உத்திகள் , மகசூல், அரிசி உணவாக எடுத்துக் கொள்வதால் ஏற்படும் நன்மைகள் பற்றி எடுத்துக் கூறினார். உதவி வேளாண்மை அலுவலர்கள் நூரூல் அக்பர் மற்றும் செல்வகுமார் அவர்கள் துறைச் சார்ந்த திட்டங்கள்பற்றி எடுத்து கூறினர்.