ஐரோப்பாவில் காணப்படும் ஸ்விஃப்ட் பறவைகள் 10 மாதங்கள் வரை வானத்தில் பறக்கும். மிக உயரத்தில் இருந்து இறங்கும் பொழுது தூங்கிக் கொள்ளும் வானத்தில் பறக்கும் பொழுதே பூச்சிகளைப் பிடித்து உண்பதும், இணை சேரும் திறனும் கொண்டுள்ளன. தரையைத் தொடாமலேயே பறக்க முடியும் என்றாலும் ஓய்வெடுக்கவும், மோசமான வானிலை காரணமாகவும் இந்த பறவை தரையிறங்குகிறது. நீண்ட பயணம் காரணமாக கின்னஸ் புத்தகத்திலும் இது இடம் பெற்றுள்ளது.