உத்தரகாண்ட்: பத்ரிநாத் பகுதியில் உள்ள மனா கிராமத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் 57 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டுள்ளனர். கட்டுமான தொழிலாளர்கள் சிலர் எல்லை பகுதியில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, அந்த பகுதியில் திடீரென பெரிய அளவில் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில், 57 தொழிலாளர்கள் சிக்கிய நிலையில், 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 47 தொழிலாளர்களை மீட்க முடியாமல் மீட்புப்பணியினர் திணறி வருகின்றனர்.