பணியில் இருந்த செவிலி மர்ம மரணம்.. கொந்தளிக்கும் உறவினர்கள்

69பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு ஆரம்ப சுகாதார நிலையத்தில், பணியாற்றி வந்த செவிலி தையல்நாயகி என்பவர் நேற்று (பிப்.,27) இரவு சரியாக 11.30 மணிக்கு உயிரிழந்தார். இது குறித்து, தையல்நாயகியின் குடும்பத்தினருக்கு அவரது தோழி தகவல் தெரிவித்துள்ளார். பதறிப்போன உறவினர்கள், மருத்துவமனைக்கு விரைந்தனர். தொடர்ந்து, அவர் உயிரிழந்ததற்கான சரியான காரணத்தை மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி