தவிட்டுப்பாளையம் ஸ்ரீ பகவதி அம்மன் தீ மிதி திருவிழா

56பார்த்தது
தொட்டியம் தாலுகா, காட்டுப்புத்தூர் அடுத்த தவிட்டுப்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ பகவதி அம்மன் கோயில் தேர் திருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கரகம் பாலித்தல், அங்க பிரதட்சணம் செய்தல், அக்னிசட்டி எடுத்தல், அலகுகுத்துதல், பெண்கள் பூவாரி கொள்ளுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதனைதொடர்ந்து கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் திரளான பக்தர்கள் இறங்கி தீமிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர். மேலும் பொங்கல் பூசை, அம்மன் திருவீதி உலா, மஞ்சள் நீராட்டு விழா ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக அம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பகவதி அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி