முசிறி அடுத்த சந்தைபாளையம் சுடுகாடு அருகே வயதானவர் ஒருவர் இறந்த கிடப்பதாக முசிறி போலீசாருக்கு கிடைத்த தகவலின் பெயரில் போலீசார் சம்பவ இடம் சென்று முதியவர் சடலத்தை மீட்டனர். முதியவர் இறந்த கிடந்த இடத்தில் விஷப்பாட்டில் கிடந்துள்ளது இதை அடுத்து விஷம் அருந்தி இறந்தது உறுதியானது.
இதையடுத்து முதியவர் சடலத்தை போலீசார் முசிறி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்த விசாரணை மேற்கொண்டதில் நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அடுத்த கண்டிப்பாளையம் சேர்ந்த நல்லதம்பி என தெரியவந்தது மேலும் இது குறித்து வழக்குப்பதிந்து முசிறி போலீசார் விசாரிக்கின்றனர்.