துறையூர் அருகே உள்ள உப்பிலியபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் அவர்கள் அப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். மேலும் இந்த நிகழ்வில் உப்பிலியபுரம் திமுக ஒன்றிய செயலாளர்கள் முத்துசெல்வம் அசோகன் பள்ளி ஆசிரியர் ஆசிரியைகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.