திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மணப்பாறைபட்டியை சேர்ந்த அழகர்சாமி. இந்நிலையில் நேற்று இவரது மூன்று ஆடுகள் அப்பகுதியில் உள்ள காட்டு பகுதியில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது இரண்டு வெறிநாய்கள் 3 ஆடுகளையும் கடித்து குதறியுள்ளது. அப்போது ஆடுகளின் கதறல் சப்தம் கேட்டு வந்த பொதுமக்கள் ஆடுகளை விரட்டி அடித்தனர். ஆனால் சற்று நேரத்தில் மூன்று ஆடுகளும் பரிதாபமாக உயிரிழந்தது. பண்ணப்பட்டியை தொடர்ந்து மணப்பாறை நகராட்சி பகுதியில் ஆடுகளை வெறி நாய்களின் தாக்குதல் பொதுமக்கள் இடையே கலகத்தை ஏற்படுத்தியுள்ளது.