திருச்சி மாவட்டம் மணப்பாறை ஈஸ்வரன் கோவிலில் நேற்று ராகு கேது பெயர்ச்சி சிறப்பு வழிபாடு நடைப்பெற்றது. இந்த வழிபாட்டில் நேற்று பகல் 1. 35 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் தொடங்கி ராகு கேது காயத்ரி ஹோமம், அஷ்டாபிஷேகம், நாகராஜாவுக்கு கலச அபிஷேகம் அதை தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்தனர். இதில் மணப்பாறையை சுற்றியுள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.