தமிழகத்தில் பெண்களுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லைகள் நடந்து வரும் நிலையில், இதற்கு கண்டனம் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது X தள பக்கத்தில், "பள்ளியறை எங்கும் பாலியல் கறைகள்! பாதிக்கப்படும் பெண்குழந்தைகள்! வேதனையில் பெற்றோர்கள்! வேடிக்கை பார்க்கும் திமுக அரசு! அலட்சியமாக அல்வா சாப்பிடும் முதல்வர்! பெண்களும், குழந்தைகளும், பெற்றோரும் அல்லற்பட்டு ஆற்றாது சிந்தும் வேதனைக் கண்ணீரின் வெப்பத்தில் திமுக ஆட்சி அழிவது உறுதி!" என்று பதிவிட்டுள்ளார்.