பொய்கை திருநகரில் அடிப்படை வசதிகள் செய்யக் கோரி மனு

54பார்த்தது
பொய்கை திருநகரில் அடிப்படை வசதிகள் செய்யக் கோரி மனு
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த பொய்கைத்திருநகரில் அடிப்படை வசதிகள் கோரி அப்பகுதி மக்கள் வட்டார வளா்ச்சி அலுவலரிடம் வியாழக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

சுமாா் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் பொய்கைத் திருநகா் பகுதியில் சாலை, குடிநீா், தெரு விளக்கு, கழிவு நீா் பாதை, திடக்கழிவு மேலாண்மை ஆகிய வசதிகள் கடந்த 28 ஆண்டுகளாக இல்லையாம். குடிநீருக்காக மட்டும் அப்பகுதி மக்கள் சுமாா் 2 கிமீ தொலைவு செல்ல வேண்டி உள்ளதாம். மேலும் அப்பகுதியில் புதா்கள் மண்டி விஷ ஜந்துகளின் நடமாட்டமும் அதிகரித்துள்ளதாம்.

இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் விசிக மாவட்டப் பொருளாளா் ந. மதனகோபால் மற்றும் ஸ்டீபன்தாஸ் ஆகியோா் தலைமையில் மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலரைச் சந்திந்து அடிப்படை வசதி கோரி மனு அளித்தனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி