முத்துமாரியம்மன் கோவில் நடந்த பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சி

53பார்த்தது
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வளநாட்டில் அருள்மிகு ஶ்ரீ முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன் வைகாசி திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
இந்நிலையில் முக்கிய நிகழ்ச்சியான பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனை செலுத்தினார்கள். இந்த நிகழ்வின் போது இப்பகுதியை சேர்ந்த ஜமாஅத் நிர்வாகத்தின் சார்பில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பிஸ்கட் மற்றும் வாட்டர் பாட்டில் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி