சிபிஐ கட்சியினர் மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

61பார்த்தது
சிபிஐ கட்சியினர் மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மின்சார உயர்வு, மின் விநியோகத்தை தனியாருக்கு தாரை பார்ப்பது, மானியம் மற்றும் சலுகை விலையில் மின்சாரம் வழங்குவதை தடுப்பது, மாநில உரிமைகளை பறிக்கும் உதய் மின் திட்டத்தை ரத்து செய்வது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் வையம்பட்டி கடைவீதியில் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டமானது வையம்பட்டி ஒன்றிய பொறுப்பு செயலாளர் திரு. தங்கராசு தலைமையில் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி