திருச்சி மாவட்டம், மருங்காபுரி பகுதிக்கு குளித்தலை அருகே உள்ள மணத்தட்டை என்ற இடத்தில் காவிரி ஆற்றில் இருந்து காவிரி நீர் பம்பிங் செய்யப்பட்டு மெகா சைஸ் ராட்சத குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் நேற்று(ஆக.27) காலை திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மணப்பாறை அருகே உள்ள வெள்ளக்கல் என்ற இடத்தில் மருங்காபுரிக்கு செல்லும் ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காவிரி குடிநீர் சுமார் 30 அடி உயரத்திற்கும் மேல் பீரிட்டு வெளியேறியது.
சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பல லட்சம் லிட்டர் காவிரி குடிநீர் வீணாக வெளியேறும் நிலையில் இதுகுறித்து அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. உடனடியாகக் குடிநீர் வீணாகாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.