இயற்கை மரணம் என்று கூறிய கர்ப்பிணி பெண் இறப்பில் சந்தேகம்

53பார்த்தது
திருச்சி - புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் உள்ள லட்சுமணன் பட்டியை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ். இவருக்கும் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி நடுக்காவேரி சேர்ந்த அருள் ஹேமா என்பவருக்கும் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
மேலும் அருள் ஹேமா மூன்று மாத கர்ப்பிணி ஆக உள்ளார்.
இந்நிலையில் அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் அருள்ஹேமா நெஞ்சுவலியால் இறந்து விட்டதாக தகவல் பரவியது.
இதை அறிந்த பெண் வீட்டார் வந்து பார்த்தபோது அருள் ஹேமா இறுதி சடங்கிற்கு தயார் செய்து கொண்டிருந்தனர். அப்போது பெண்ணின் உடம்பில் காயம் இருப்பதாகவும் அவள் சாவில் மர்மம் இருப்பதாகவும் உடலை அடக்கம் செய்யக்கூடாது என தடுத்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.
இது குறித்து தகவல் அறிந்த மாத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பெண்ணின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி