கோமாரி நோய் தடுப்பூசி முகாமை துவக்கி வைத்த அமைச்சர்

61பார்த்தது
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட திருவாசி கிராமத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் கோமாரி நோய் தடுப்பு ஊசி முகாம் நடைபெற்று வருகிறது. இந்தமுகாமினை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே. என். நேரு தொடங்கி வைத்தார். கோமாரி நோய் தாக்கத்தால், கால்நடைகளுக்கு அதிக காய்ச்சல், வாய் மற்றும் காலில் புண் ஏற்படுதல், வாயில் உமிழ்நீர் வடிதல், பால் சுரப்பது குறைதல் மற்றும் சினை பிடிப்பதில் சிக்கல் ஆகிய பாதிப்புகள் ஏற்படுகிறது.
இத்தகைய பாதிப்புகளில் இருந்து கால்நடைகளை பாதுகாக்க திருச்சி மாவட்டத்தில், திருச்சி மண்டல கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கால்நடைகளுக்கான ஐந்தாவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் ஆரம்பிக்கப்பட உள்ளது. இதில் சுமார் 3லட்சத்து 11 ஆயிரம் கால்நடைகள் பயன்பெற உள்ளன. இந்த தடுப்பூசி பணி தொடர்ந்து 21 நாட்களுக்கு நடைபெறுகிறது. இதில் மண்ணச்சநல்லூர் ஒன்றியத்தில் சுமார் 19 ஆயிரத்து 500 கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது.
இந்த முகாமில், மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார்,
மண்ணச்சநல்லூர் எம். எல். ஏ கதிரவன், கால்நடை பராமரிப்புத்துறையின் மண்டல இணை இயக்குனர் கணபதி மாறன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள், மருத்துவர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி