லால்குடி அருகே கல்லூரி மாணவி மாயம் - போலீசார் விசாரணை

581பார்த்தது
லால்குடி அருகே கல்லூரி மாணவி மாயம் - போலீசார் விசாரணை
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள கபிரியேல்புரத்தைச் சார்ந்தவர் சிறுமலர். இவரது 20வயதான மகள் ஜெனிபர் என்கின்ற மரியாலிக்கொரியா திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி வழக்கம் போல் கல்லூரி செல்வதற்காக கபிரியேல்புரம் பேருந்து நிறுத்தத்திற்கு வந்துள்ளார். ஆனால் அவர் கல்லூரிக்கு செல்லவில்லை எனவும், மீண்டும் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதை அறிந்த அவரது பெற்றோர் மாணவியை பல இடங்களில் தேடிப் பார்த்துள்ளனர், எங்கு தேடியும் கிடைக்காததால் தனது மகளைக் காணவில்லை என மாணவியின் தாயார் லால்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி