கள்ளச்சாராய வழக்கு மேலும் மூன்று பேர் கைது

58பார்த்தது
கள்ளச்சாராய வழக்கு மேலும் மூன்று பேர் கைது
கள்ளக்குறிச்சி கருணாபுரம், சேஷசமுத்திரம், மாதவச்சேரி ஆகிய பகுதியில் விற்கப்பட்ட மெத்தனால் கலந்த விஷச் சாராயத்தை குடித்த 58 பேர் இறந்தனர். பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி., போலீசார், மெத்தனால் கலந்த சாராயம் விற்றவர்கள், சென்னையில் இருந்து மெத்தனால் வாங்கி விற்ற புதுச்சேரியை சேர்ந்த மாதேைஷ கைது செய்தனர். தொடர்ந்து மாதேஷக்கு தனியார் நிறுவனங்களில் இருந்து மெத்தனால் வாங்கி கொடுத்த சென்னை மதுரவாயல் சிவக்குமார் உள்ளிட்ட 12 பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

நேற்று கள்ளக்குறிச்சி ஏமப்பேர் தெய்வீகன் (35), சூளாங்குறிச்சி அய்யாசாமி (55), அரிமுத்து ஆகிய 3 பேரை கைது செய்தனர். சி.பி.சி.ஐ.டி., போலீசார் இதுவரை 15 பேரை கைது செய்துள்ளனர். மேலும், மாதேஷை போலீஸ் காவல் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி., போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி