காமெடி நடிகர் வெங்கல் ராவ் உடல்நிலை மோசம்

75பார்த்தது
காமெடி நடிகர் வெங்கல் ராவ் உடல்நிலை மோசம்
காமெடி நடிகர் வடிவேலுவுடன் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்த நடிகரான வெங்கல் ராவ், ஒரு கை, ஒரு கால் செயல் இழந்து, தனது சொந்த ஊரான விஜயவாடாவில் சிகிச்சை பெற்று வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு இவருக்கு சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டு வீட்டில் இருந்தபடி சிகிச்சையில் இருந்த நிலையில் தற்போது ஒரு கை மற்றும் ஒரு கால் செயலிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் வெங்கல் ராவ் கூடிய விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி