ஆஸி.,யை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா!

73பார்த்தது
ஆஸி.,யை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா!
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 குரூப்-1 சுற்றுப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் நேற்று மோதின. இதில் 24 ரன்களில் இந்தியா வெற்றி பெற்று அரையிறுதி முன்னேறியது. மேற்கு இந்தியத் தீவுகளின் செயின்ட் லூசியாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது. 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா விளையாடியது.

தொடர்ந்து ஆஸ்திரேலியா 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்திருந்தது. இதன் மூலம் 24 ரன்களில் இந்தியா வெற்றி பெற்றது. அதே போல், அரையிறுதிக்கு குரூப்-1 பிரிவில் முதல் அணியாக இந்தியா தகுதி பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி