ரீல்ஸ் மோகத்தில் கார்களை கடலில் இறக்கிய இளைஞர்கள் (வீடியோ)

75பார்த்தது
இன்றய காலகட்டத்தில் இளைஞர்கள் பலர் ரீல்ஸ் எடுப்பதில் ஆர்வமாக பல ஆர்வக்கோளாறான விஷயங்களை செய்து வருகின்றனர். அந்தவகையில் குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் உள்ள கடற்கரையில் ரீல்ஸ் எடுக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக கார்கள் இரண்டும் கடல்நீரில் சிக்கின. அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஒருவழியாக கார்கள் மீட்கப்பட்டுள்ளன. ஆனால், கடல்நீர் உள்ளே சென்றதால் ஜீப்-ன் எஞ்சின் முற்றிலும் சேதமடைந்துவிட்டது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவியதை அடுத்து 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நன்றி: சன் நியூஸ்