ஆஸ்திரேலிய அணிக்கு இலக்கு நிர்ணயித்த இந்திய அணி

76பார்த்தது
ஆஸ்திரேலிய அணிக்கு இலக்கு நிர்ணயித்த இந்திய அணி
T20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இன்று இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங் தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 20 ஓவர்கள் முடிவில் ரன்கள் 205 எடுத்தது. இந்திய அணி சார்பில் ரோகித் ஷர்மா 41 பந்துகளில் 7 ஃபோர்கள், 8 சிக்ஸர்கள் விளாசி 92 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சூரியகுமார் யாதவ் 31 ரன்கள், ஷிவம் துபே 28 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலியா சார்பில் ஸ்டார்க் மற்றும் ஸ்டோனிஸ் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்க உள்ளது.

தொடர்புடைய செய்தி