ஆவணி மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அதிலும் சிவபெருமானுக்கு உகந்த திங்கள்கிழமையில் அமாவாசை வந்திருப்பது மிகுந்த விசேஷம். திங்கட்கிழமையும் அமாவாசை சேர்ந்து வரும் நாள் சோமவார அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் அரச மரத்தில் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும் இருப்பதால் அரச மரத்தினை வழிபட வேண்டும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் அரச மரத்தினை வழிபட்டால் குழந்தை பிறக்கும். கேட்ட வரங்கள் கிடைக்கும்.