கட்டபொம்மனுக்குக் கோட்டை எழுப்பியவர் கலைஞர் - கனிமொழி

592பார்த்தது
கட்டபொம்மனுக்குக் கோட்டை எழுப்பியவர் கலைஞர் - கனிமொழி
சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டியன் கட்டபொம்மனுக்குக் கோட்டை எழுப்பியவர் கலைஞர் - கனிமொழி கருணாநிதி நெகிழ்ச்சி

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடம் இந்தியா கூட்டணி தி. மு. க வேட்பாளர் கனிமொழி கருணாநிதி இன்று (03/04/2024) தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள வைப்பார் பகுதியில் உள்ள வீரபாண்டியன் கட்டபொம்மன் நினைவு ஆலய அருகே தனக்கு ஆதரவாகப் பரப்புரை மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, கனிமொழி கருணாநிதி அங்கு இருந்த வீரபாண்டியன் கட்டபொம்மன் நினைவு ஆலயத்திற்குச் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான பெ. கீதா ஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, இந்தியா கூட்டணி சார்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி கருணாநிதி: சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டியன் கட்டபொம்மனுக்குக் கோட்டை எழுப்பியவர் கலைஞர் என்றார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி