திருச்செந்தூர், காயல்பட்டணம், ஆறுமுகநேரி, குரும்பூர், நாசரேத், ஆழ்வார்திருநகரி, ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர் பகுதி மக்கள் வந்தே பாரத் இரயிலுக்கு செல்வதற்கு வசதியாக திருச்செந்தூரில் இருந்து இணைப்பு இரயில் இயக்க வேண்டும் என ஒய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
நாசரேத் புனித லூக்கா சமுதாய கல்லூரியில் நாசரேத் வட்டார தமிழ் நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க 61-வது ஆண்டு விழா மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. வட் டாரதலைவர் பேராசிரியர் ஜெயச்ச ந்திரன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் சந்திரசேகர் வரவேற்றார். பொருளாளர் ரூபன் வரவு செலவு கணக்குகளை சமர்ப்பித்தார். நெல்லை , குமரி மண்டல துணைத்தலைவர் தங்கவேல், முன்னாள் மாநில துணைத் தலைவர் அய்யலுசாமி , மூக்குப்பீறி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக் டர் சோனியா, நாசரேத் பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரகலா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பால் ஆபிரகாம், ஒய்வு பெற்ற பேரா சிரியர் காசிராஜன், தபால் தந்தி துறை ஒய்வு அதிகாரி சொர்ணமா ணிக்கம், பாண்டி, கண்ணன், வெங் கடாச்சாரி எந்த ராஜப்பா ஆகியோர் வாழ்த்திப்பேசினர்.