மக்கள் குறை களையும் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள்: ஆட்சியர்.

65பார்த்தது
தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறை களையும் நாள் கூட்டத்தில் பல்வேறு நலதிட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி, தலைமையில் திங்கள்கிழமை மக்கள் குறை களையும் நாள் கூட்டம் இன்று (29. 07. 2024) நடைபெற்றது. வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின்கீழ் சமுதாய தொழிற்திறன் பள்ளிகளில் கொத்தனார் பயிற்சி பெற்ற இளைஞர்கள் தேசிய அளவில் அங்கீகாரம் பெறும் நோக்கில் அவர்களது திறன்களை ஆய்வு செய்து கட்டுமானத் தொழில் வளர்ச்சிக் குழுமம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் தேர்வு நடத்தி சான்றிதழ் வழங்குகின்றது.

இச்சான்றிதழ் பெறும் பயனாளிகள் அரசு மற்றும் தனியார் துறைகளில் அங்கீகரிக்கப்பட்ட பயிற்றுநர்களாகவும், அரசு துறைகளில் மானிய உதவி பெற்று தொழில் முனைவோர்களாக மாறுவதற்கான வாய்ப்புகளும், உயர்கல்வி பெறுவதற்கு அடிப்படையாகவும் அமைகின்றது.

தொடர்புடைய செய்தி