துபாயில் நடைபெற்ற கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின் அணி மூன்றாவது இடத்தைப் பிடித்து அசத்தியது. அவருக்கு உலகெங்கும் உள்ள ரசிகர்கள், இந்திய அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில், தனது குழுவுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை அஜித் வெளியிட்டுள்ளார். அதில், 'எனது குழுவுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். உங்கள் உடல்நலனை பார்த்துக் கொள்ளுங்கள். மீண்டும் சந்திப்போம்' என கூறியுள்ளார்.