பிரேசிலிய வணிக உரிமையாளரான பவுலா என்ற பெண், தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளார். அப்போது, இரவு உணவைத் தயாரிப்பதற்காக கடற்கரை விற்பனையாளரிடம் இருந்து மீன்கள் வாங்கியுள்ளார். அந்த மீனை சுத்தம் செய்த அந்த பெண், அதனை கிரில்லில் வைத்துள்ளார். சிறிது நேரத்தில் அந்த மீனில் ஏதோ மாற்றம் தெரிந்துள்ளது. அருகே சென்று பார்த்தபோது, அந்த மீனிற்கு, மனிதர்கள் போல பற்கள் இருந்துள்ளன. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், இதனை வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.