ஏப்ரிலியா நிறுவனமானது கடந்த 2024 நவம்பர் மாதம் ஐரோப்பாவில் நடைபெற்ற EICMA 2024 நிகழ்வில் டுவோவோ 457 பைக்கை முதலில் அறிமுகப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து அடுத்த மாதம் இந்த பைக்கை இந்தியாவில் வெளியிட ஏப்ரிலியா திட்டமிட்டு வருகிறது. 12.7 லிட்டர் எரிபொருள் டேங்குடன், 175 கிலோ எடையைக் கொண்டுள்ள டுவோனோ 457-ன் விலை ரூ. 4 லட்சம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது.