களை கட்ட தொடங்கிய பனங்கிழங்கு சீசன்!

4900பார்த்தது
களை கட்ட தொடங்கிய பனங்கிழங்கு சீசன்!
விளாத்திகுளம் பகுதிகளில் தொடங்கிய பனங்கிழங்கு சீசன்!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதிகளான வேம்பார், தாப்பாத்தி, தொப்பம்பட்டி, குளத்தூர், பனையூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட பனைத்தொழிலாளர்கள் தொழிலாளர்கள் பனைத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்பகுதியில் தமிழ் மாதமான ஆடி மாதத்தில் பனங்கொட்டைகளை(மனம் பழங்களை) மண்ணுக்கடியில் புதைத்து, மார்கழி, தை மாதங்களில் விளைந்த பனங்கிழங்குகளை அறுவடை செய்வது வழக்கம். அதன்படி, தற்போது பனங்கிழங்குகள் அறுவடை செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அவ்வாறு அறுவடை செய்யப்படும் பனங்கிழங்குகள் சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, கோவில்பட்டி, விளாத்திகுளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். 20 கிழங்குகள் கொண்ட ஒரு கட்டு ரூ. 100 க்கும் 10 கிழங்கு கொண்ட ஒரு கட்டு ரூபாய் ரூ. 50க்கும் விற்பனை செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் பனை மரத்திலிருந்து பனங்கொட்டைகளை வெட்டி மண்ணில் புதைத்து பனங்கிழங்கு அறுவடை செய்து வருகின்றனர். பனைத் தொழிலாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்களில் கடனுதவி செய்ய வேண்டும் என்று பனைத் தொழிலாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி