ராஜஸ்தான்: டோல்பூர் பகுதியில் திருமணத்தின்போது மணமகனின் கை நடுங்கியதால் மணமகள் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீபிகா- பிரதீப் ஆகியோருக்கு பெற்றோரால் திருமண நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், திருமணத்தின்போது பிரதீபின் கைகள் நடுங்கியதால் தீபிகா அவருக்கு ஏதாவது உடல்நலப் பிரச்சனை இருக்கலாம் என்று சந்தேகப்பட்டுள்ளார். இதையடுத்து, பிரதீப் தனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்று விளக்கம் கொடுத்த போதிலும், தீபிகா திருமணத்தை நிறுத்தியுள்ளார்.