ஈரான் நாட்டின் சுற்றுலா வழிகாட்டி ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரத்த மழை தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹார்முஸ் தீவின் கடற்கரையை ஒட்டிய மலை முகட்டில் பெய்த ரத்த மழை கடலுக்குள் சென்று கடலையும் சிவப்பு நிறமாக மாற்றுகிறது. ஆனால், உண்மையில் அந்த தீவில் உள்ள மண்ணில் செறிந்திருக்கும் இரும்பு ஆக்ஸைடு தான் மழைநீரை சிவப்பாக்கியுள்ளது. இந்த அறிவியல் உண்மையை அறியாத இணைய வாசிகள் ரத்த மழை என புரளியை கிளப்பியுள்ளனர்.