தூத்துக்குடியில் அகல ரயில்பாதை பணிகள் நடைபெற உள்ளதால் இன்று (அக். 5) காலை 10. 30 மணி மாலை 5 மணி வரை 1வது ரயில்வே கேட் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில், "மதுரை-தூத்துக்குடி இரயில்வே அகல இரட்டை பாதை பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, பெரிய பயணிகள் ரயில் நிறுத்தம் செய்வதற்கு வசதியாக தூத்துக்குடி ரயில் நிலையத்தில் தற்போதுள்ள பிளாட்ஃபார்ம் எண் (1) 65 மீட்டர் நீட்டிப்புக்கு பரிந்துரைக்கப்படுகிறது.
இப்பணிகளுக்காக ரயில்வே லெவல் கிராசிங் கேட் எண் 487 (தூத்துக்குடி முதல் கேட்) அருகில் உள்ள இந்த இடத்தில் இருக்கும் ரயில்வே பாயின்ட் கிராசிங்கை அகற்றி, அதை மறுசீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இன்று (அக். 5) காலை 10. 00 மணி முதல் மாலை 5 மணி வரை ரயில்வே கேட் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.