வாள்வீச்சுப் போட்டி - தங்கம் வென்ற பெண்ணிற்கு உதயநிதி வாழ்த்து

53பார்த்தது
வாள்வீச்சுப் போட்டி - தங்கம் வென்ற பெண்ணிற்கு உதயநிதி வாழ்த்து
தேசிய அளவிலான வாள் வீச்சுப் போட்டியில் 12ஆவது முறையாக பவானி தேவி தங்கம் வென்றுள்ளார். அவருக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார். அவர் கூறியதாவது, “தன்னிகரில்லா சாதனையைப் படைத்துள்ள தங்கை பவானி தேவிக்கு வாழ்த்துகள். இவர், நம்முடைய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ELITE திட்ட Player என்பது கூடுதல் சிறப்பு. திசையெங்கும் வாள்வீசி வாகை சூடி வரும் தங்கை பவானி தேவியின் வெற்றிப்பயணம் தொடர என்றும் துணை நிற்போம்” என்றார்.

தொடர்புடைய செய்தி