அம்பேத்கர் திருவுருச்சிலைக்கு கனிமொழி மாலை அணிவித்து மரியாதை

60பார்த்தது
சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் 134 வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி தென் பாகம் காவல் நிலையம் எதிரே உள்ள டாக்டர் அம்பேத்கர் திருவுருவச் சிலைக்கு தூத்துக்குடி மாவட்ட திமுக சார்பில் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி, அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ஆர் ராதா கிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி, உள்ளிட்ட திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்‌
இந்த நிகழ்ச்சியில் மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் உமரி சங்கர், மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன், துணை மேயர் ஜெனிதா செல்வராஜ் சுகாதாரக் குழு தலைவர் எஸ் சுரேஷ் குமார், திமுக மாவட்ட பிரதிநிதிகள் தெர்மல் சக்திவேல், முருக இசக்கி, மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், மாவட்ட துணைச் செயலாளர் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில் குமார், பணிக்குழு தலைவர் கீதா முருகேசன் கல்வி குழு தலைவர் அதிர்ஷ்ட மணி ரவீந்திரன் மாநகராட்சி மண்டல தலைவர்கள் வழக்கறிஞர் பாலகுருசாமி, கலைச்செல்வி திலகராஜ், நிர்மல் ராஜ், அரசு வழக்கறிஞர் ஆனந்த கேப்ரியல், இளைஞர் அணி முத்துதுரை வட்ட செயலாளர்கள் கதிரேசன் வழக்கறிஞர் சதீஷ்குமார் கங்கா ராஜேஷ் உள்ளிட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி